C K RAJAN Cuddalore District Reporter
94884 71235…

கடலூர் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மருத்துவ மற்றும் துறைமுக அலுவலர் பாரம்பரிய கட்டடங்கள் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைகும் பணியினை தொடங்கி வைத்தார்

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில், தேவனாம்பட்டினம் மருத்துவ மற்றும் துறைமுக அலுவலர் பாரம்பரிய கட்டடங்கள் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் பழமையான கட்டடங்கள், புராதான சின்னங்களை புனரமைத்து மறுசீரமைப்பு செய்து பழமைதன்மை மாறாமல் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் மாநகராட்சிப் பகுதியில் வெள்ளிக் கடற்கரை அருகே பராம்பரிய கட்டடங்களாக உள்ள துறைமுக மற்றும் மருத்துவ அலுவலர்கள் கட்டடங்களை புனரமைத்து மறுசீரமைக்கும் பணி இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டது.

சுமார் 250-300 வருடங்கள் பழமைவாய்ந்த துறைமுக அலுவலர் பராம்பரியக் கட்டடம் மற்றும் சுமார் 117 வருடங்கள் பழமைவாய்ந்த மருத்துவ அலுவலர் பராம்பரிய கட்டடம் ஆகியவை வெள்ளிக் கடற்கரைக்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது. 370 ச.மீ பரப்பளவுள்ள தரைதளம் மற்றும் 155 ச.மீ பரப்பளவுள்ள முதல்தளம் என மொத்தம் 525 ச.மீ பரப்பளவுள்ள துறைமுக அலுவலர் கட்டடம் ரூ.4.90 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் 215 ச.மீ பரப்பளவுள்ள தரைதளம் மற்றும் 227 ச.மீ பரப்பளவுள்ள முதல்தளம் என மொத்தம் 442 ச.மீ பரப்பளவுள்ள மருத்துவ அலுவலர் கட்டடம் ரூ.5.25 கோடி மதிப்பீட்டிலும் பழமை மாறாமல் புனரமைக்கப்படவுள்ளன.

தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் வகையில் நெய்தல் பூங்கா, பெயர் பலகைகள், சாலை தடுப்புகள், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.4.98 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் நீலக்கொடி சான்றிதழ் பெறும் முயற்சிக்காக அழகிய நடைபாதைகள், பூங்கா, கடற்கரையில் ஓய்வெடுக்கும் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சிப் பகுதியில் மக்களின் நலன் கருதி பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுப்பராயலு பூங்கா சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். அதுமட்டுமன்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 15 ஏக்கர் பரப்பளவில் புதியதாக பெரியளவில் பூங்கா அமையவிருக்கிறது.

மழைக்காலம் என்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும், விவசாயிகளின் விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிருவாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை நல்ல முறையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பெற்று பாதுகாக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவரம் குறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது என மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான்,  வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், துணை ஆட்சியர் (பயிற்சி) கே.டியுக் பார்க்கர்,அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *