சாமானிய மக்களை அரசியல்படுத்த தொடங்கப்பட்ட தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தின் அரசியல் பயணம், 75 ஆண்டுகளை நிறைவுசெய்து நூற்றாண்டு நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் தன்னிகரில்லா இப்பயணத்தை திமுக இளைஞரணி சார்பில் ‘அறிவுத்திருவிழா’வாக’ வள்ளுவர் கோட்டத்தில் கொண்டாட இருப்பதை ஒட்டி
நவம்பர் 8 முதல் 16 வரை நடைபெறவிருக்கும் திமுக 75 அறிவுத்திருவிழாவை மையப்படுத்தி நடைபெறவுள்ள முப்பெரும் விழா நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழை கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களிடம் இன்றைய தினம் இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவிற்கு கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட அறிவுத் தேடல் கொண்ட அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறும் இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் சந்திப்பில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் தூத்துக்குடி ஜோயல் உள்பட மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.