கற்றல் வசதியுடன் கல்வி திட்டம் கிராமங்கள் தோறும் அரசுப் பள்ளிகளுக்கு இலவச பெஞ்சுகள் சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை சாதனை.
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கற்றல் வசதியுடன் கல்வி என்னும் திட்டத்தை 2025 ஜூலை மாதம் சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை அறிமுகப்படுத்தி கிராமங்களில் செயல்படும்
அரசுத் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறையில் உட்காருவதற்கு பெஞ்சுகளும் எழுதுவதற்கு மேசைகளும் வழங்கிவருகிறது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமப்புற அரசுப் பள்ளிகளில், போதுமான இருக்கைகள்
மேசைகள் இல்லாததால், மாணவர்கள் வகுப்பறைகளில் தரையில் அமர்ந்து படிக்க வேண்டியுள்ளது. நீண்ட நேரம் தரையில் அமர்ந்திருப்பது, முதுகெலும்பு வட்டுகளின் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது. காலப்போக்கில் நாள்பட்ட முதுகுவலி மற்றும் முதுகெலும்பு குறைபாடுகள் போன்ற நிலைகளுக்கு வழிவகுக்கும். இவ்வாறு குறுகி அமர்ந்து செயல்படுவது நுரையீரல் கொள்ளளவைக் குறைக்கவும் செய்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல் வசதியை மேம்படுத்த மிகச்சரியான இருக்கை வசதிகளை வழங்குவதன்மூலம் மாணவர்களின் உடல்நலனுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும் இயலும் என்பதனால் ‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தை சிறுதாமூர்
ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் கவிஞர் விஜயகிருஷ்ணன் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.
கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தின்படி ஏற்கனவே அச்சிறுப்பாக்கம் கல்வி வட்டாரத்தில் உள்ள செனையனேரி, சிறுதாமூர், அனந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளுக்குத் தேவையான இருக்கைகள் மற்றும் எழுது மேசைகள் வழங்கப்பட்டது. உரியகாலத்தில் செய்யப்பட்ட
இந்த வசதியினால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து இவ்வாறே அவ்வட்டாரத்தில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் ‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தை செயல்படுத்தி உதவ வேண்டுகோள் விடுத்தனர்.
கற்றல் வசதியில் கல்வி’திட்டத்தின் தொடர்பணியாக சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர்
அறக்கட்டளை பெருநகரங்களில் செயல்படும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் தொடர்புகொண்டு அந்நிறுவனங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள அதேநேரம் பயன்படுத்தக்கூடிய இருக்கைகள் மற்றும் மேசைகள நன்கொடையாகப் பெற்று அவற்றை சீர்செய்து வண்ணம் தீட்டி தேவைப்படும் கிராமப்புற அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு வழங்குகின்றது.
தளவாடப் போக்குவரத்து மற்றும் புதுப்பித்தல் செலவுகளை அறக்கட்டளையே ஏற்கிறது
இந்த திட்டத் செயலாக்கம் அரசின் நிதி உதவியின்றி மேற்கொள்ளப்படுகிறது.
அனைத்து தளபாடங்களும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக ஏற்றது என்பதை உறுதி செய்ய, முழுமையான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.
கற்றல் வசதியுடன் கல்வி திட்டத்தின் இலக்கென்பது அமரும் இருக்கைகள்
மற்றும் எழுது மேசைகள் தேவைப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு இவற்றை வழங்குவதேயாகும். பின்னர் இத்திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
மேலும் அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களைத் தொடர்புக்கொண்டு வகுப்பறைகளுக்குத் தேவையான இருக்கை மற்றும் எழுது மேசைகளின் எண்ணிக்கையை அறிந்து ‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டதின்மூலம் வழங்கும் நடவடிக்கையில் இந்த அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
அச்சிறுப்பக்கம் ஒன்றியத்தில் மேலும் 18 பள்ளிகளுக்கு இருக்கைகள் வழங்கப்படும்.
இத்தகவல்களை கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தின் நிறுவனரும்,
சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான கவிஞர் விஜயகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் பணிகளை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான தன்னார்வலர் குழுக்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
என்பது குறிப்பிடத்தக்கது இருக்கை மற்றும் எழுது மேசைகளை அச்சிறுப்பாக்கம் வட்டம் வடமணிப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளிக்கு வழங்கும் விழாவிற்கு அச்சிறுப்பாக்கம் ஒன்றியப் பெருந்தலைவர் ஒரத்தி கே.கண்ணன் தலைமை தாங்கினார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் சோமசுந்தரி,கவுன்சிலர் பாலசுப்ரமணியன்,வடமணிப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி வடிவேல், சிறுதாமூர் ஊராட்சி தலைவர் செல்லப்பன், துணைதலைவர் முத்துவிஜி, செனயனேரி வார்டு உறுப்பினர் அன்பரசு, ரங்கப்பன் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.