கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட வி.என்.சி.குழும நிறுவனமும்,கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளி சதுரங்க சங்கத்தின் தலைவருமான கோகுல், தலைமை விருந்தினராகவும், கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டார்.
மலர் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் பேங்க் சுப்பிரமணி, தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கத்தின் மாநில துணைத் தலைவர் குணசேகரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.பின்னர்பாமக மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் சுரேஷ், E.Y. தனபதி ஆகியோர் கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளி சதுரங்க சங்கத்தின் ஆதரவுடன்,உடல் ஊனமுற்றோர் சதுரங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த CFPD 1வது கரூர் சர்வதேச ஓபன் FIDE மதிப்பீட்டு சதுரங்கப் போட்டியின் 6வது சுற்றை தொடங்கி வைத்தனர்.6வது சுற்று தொடக்க விழாவில், AICF-ன் முன்னாள் செயலாளர் V.ஹரிஹரன், பரணி பார்க் பள்ளிகளின் மூத்த முதல்வரும் KDCAPD-யின் துணைத் தலைவருமான டாக்டர் C.ராமசுப்பிரமணியம், CFPD-யின் பொதுச் செயலாளர் VL ஆனந்த் பாபு, KDCAPD-யின் செயலாளர் C. சண்முகம்,நிகழ்வின் தலைமை நடுவர் R. ஸ்ரீவஸ்தன், சர்வதேச நடுவர் M.சுரேஷ், KDCAPD-யின் 10 விளையாட்டு மற்றும் இணைச் செயலாளர் S. சபரிநாதன், KDCAPD-யின் பொருளாளர் M. முகமது கமால்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐந்தாவது சுற்று முடிந்த பிறகு, மொத்தம் 10 வீரர்கள், FIDE மாஸ்டர் ராம் எஸ். கிருஷ்ணன் (BSNL) கோகுல விஷ்ணு டேனிஷ்,பிரபாகரன்,சர்வேஷ்( தமிழ்நாடு), தருண்(டெல்லி), விக்ராந்த் கிருஷ்ணகுமார், யுவனேஷ் (இருவரும் கர்நாடகா), புவன் சுஹாஸ் ஷிடோல் (மகாராஷ்டிரா), இஷ்மீத் சிங் (பஞ்சாப்) ஆகியோர் 5/5 என்ற முழு புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வீரர்களும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு வீரரும் உட்பட மொத்தம் 18 வீரர்கள் 4.5 புள்ளிகளுடன் நெருக்கமாக உள்ளனர்.