காவல்துறை சார்பில் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஊக்குவிக்கும் வகையில் 2025ஆம் ஆண்டிற்கான கலைஞர் காவல் கோப்பைகளை மாநில அளவில் முதலிடம் பெற்ற விழுப்புரம் காவல் நிலையத்திற்கும், இரண்டாம் இடம் பெற்ற திண்டுக்கல் நகர காவல் நிலையத்திற்கும், மூன்றாம் இடம் பெற்ற பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.