அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

(அதிமுக) பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.கே.என். ராம ஜெயலிங்கம் தலைமை தாங்கினார். கிராம மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாள் வேலை உறுதித் திட்டமாக அறிவித்ததை சீர்குலைக்க முயலுகிறது என்று (திமுக) அரசு மீது அவர் குற்றம்சாட்டினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பாமக சமூக ஊடக பேரவை தலைவர் பாலு கிராமப்புற ஏழை மக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டம் தற்போது பல்வேறு நிர்வாக குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எடப்பாடியார் அறிவித்த 125 நாள் வேலைத் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயல்கிறது என்றும், கூலி தொகை வழங்குவதில் தாமதம், தகுதியானவர்களுக்கு வேலை மறுப்பு போன்ற பிரச்சினைகள் நிலவுகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பாஜக மாவட்ட தலைவர் மருத்துவர் பரமேஸ்வரி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் மாசிலாமணி, ஐக்கிய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோசப், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஜெயங்கொண்டம் நகரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது இதில் பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *