திருச்சுளி ஊராட்சி ஒன்றியம் முழுமைபெற்ற விழா
அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி SBK மேனிலைப் பள்ளியில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் முன்னேறிய ஒன்றியமாக முழுமை பெற்ற விழா மாவட்ட ஆட்சித் தவைவர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது விழாவில் ஒன்றிய நிதி ஆயோக் அதிகாரி அவர்கள் விழா சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்..
திட்ட இயக்குனர் மாவட்ட சுகாதார அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்..
விழா ஏற்பாடுகளை திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மினி செய்திருந்தார்கள். இதில் கல்லூரணி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.