தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் காவல் நிலையம் யுகேஜி மாணவ மாணவிகளை காவல்துறை அலுவலகத்தில் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலையத்தில் கிரீன்ஃபீல்ட் பள்ளியிலிருந்து காவல் நிலையத்திற்கு கல்வி சுற்றுலாவில் ஒரு பகுதியாக தாராபுரம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று காவல்துறை சம்பந்தமான நிகழ்வுகளை தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 24 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
காவல் நிலையத்தில் மாணவ மாணவிகளை குழந்தைகள் காவலர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள். வாக்கி டாக்கி மற்றும் துப்பாக்கி. ஆண் மற்றும் பெண் கைதி அறைகள். பிறகு போராட்டத்தில் ஈடுபட்டால் காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை பற்றி காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மாணவர்களுடன் உரையாடினார் உடன் எஸ் எஸ் ஐ சரவணன் உரையாடும் போது கல்வி அவசியத்தை குறித்தும் அடுத்த தலைமுறை உங்களில் ஒருவர் இங்கே ஒரு அதிகாரியாக வர வாய்ப்புள்ளது கவனமாக படியுங்கள் உலகத்தில் நடக்கும் அன்றாட விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள் என்று மாணவர்களிடம் எடுத்துரைத்தார் மற்றும் கோவிந்தன் காவலர் வாக்கி டாக்கி பயன்பாட்டை மாணவர்களுடன் எடுத்துரைத்தார் உடன் தாராபுரம் காவல்துறை அதிகாரிகள் மாணவர்களை மகிழ்ச்சியுடன் இனிப்பு வழங்கி வழி அனுப்பி வைத்தனர் இதில் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.