ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அக்னி வீரபத்திரர் சுவாமி திருக்கோவில் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாசிக்களரி திருவிழா கடந்த இரண்டு நாளாக நடைபெற்று வருகிறது.
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாசிக்களரி திருவிழாவில் நேற்று
கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து வானவேடிக்கை, தாரை தப்பட்டை, ஜிப்லா மேளம், ஜெண்டை மேளம் உட்பட பல்வேறு மேளதாளங்களுடன் 200 க்கும் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ஆண்கள் பெரிய வேல் குத்தி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.மேலும் மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவர் பெரிய வேல் குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினார். நீண்ட தூரம் ஊர்வலமாக சென்று
அக்னி வீரபத்திரர் சுவாமி கோவிலுக்கு சென்று தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
பின்னர்சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,சிறப்பு பூஜை நடைபெற்றது பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து வழிபாடு செய்தனர்