தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குடும்பத்தின் (lCAR) 21 நாட்கள் குளிர் கால பள்ளி நடைபெற்றது.
இது lCAR நிதி உதவி உடன் (6.56.. லட்சம் நடத்தப்படது இக்கல்லூரியில் இயற்கை வள மேலாண்மை துறை தலைவர் பேராசிரியர் முனிவர் G. J. ஜானவி இப் பள்ளிக்கு பயிற்சி இயக்குனராக இருந்து நடத்தினார். தோட்டக்கலை பயிர்கள் விலை பொருள்களின் வாழ்நாளை அதிகரிக்க கூடிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயிற்றுவித்தல் இப்பள்ளியின் கருப்பொருள் ஆகும்.
இந்தப் பயிற்சியில் சிக்கிம், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து விஞ்ஞானிகள் இப்ப பயிற்சி பள்ளியில் பங்கேற்றனர். இப்பயிற்சி தொடக்க விழாவில் பேராசிரியர் ஜி ஜோ.ஜானவி அனைவரையும் வரவேற்று தொடக்க விழா துறை தலைவர் வாழ்த்துரை வழங்கினார்.
இப்பள்ளி தொடக்க விழா சிறப்பு விருந்தினராக கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள CSiR -nllst தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு நிலையத்தின் இயக்குனர் முனிவர் சி.ஆனந்த ராமகிருஷ்ணன் இந்திய ஜனாதிபதிடமிருந்து 2024 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய அறிவியல் விருது ஆன ராஷ்டிய விஞ்ஞான சி புரஸ்கார் பெற்றவர்.
தலைமை உரை கல்லூரி முதல்வர் முனிவர் எஸ் சரஸ்வதி இப்பயிற்சி பள்ளி அறுவடைக்குப் பின்னர் இழப்புக்களை குறைப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதை வலியுறுத்தி உரையாற்றினார். இந்த குளிர்கால பயிற்சி பள்ளியின் நிறைவிழாவினை 21 நாட்கள்.. குளிர்கால பள்ளி கல்லூரியில் முதல் முறை நடத்தப்பட்டதாக பெருமையுடன் தெரிவித்து பாராட்டி இதற்கு நிதி உதவி அளித்த ஐ சி ஏ ஆர் க்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
விழா சிறப்பு விருந்தினர் உதவ இயக்குனர் ஜெனரல் முனிவர் சீமா ஜக்கி இணைய வழிகள் இணைந்து குளிர்கால பள்ளியில் பங்கேற்ற அனைத்து விஞ்ஞானிகளையும் பாராட்டி அவர்களை கருத்து கேட்டறிந்தார்..
மேலும் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை உத்திகளை கண்கூடாக தேனி திண்டுக்கல் மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் பதப்படுத்துதல் நிலையங்களில் பார்த்து கற்றுக் கொண்டதால் பங்கேற்ற விஞ்ஞானிகள் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு விளக்கி கூறி பாடம் கற்பிக்க எளிதாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனிவர் ஆர் பியுலா பேராசிரியர்.. & மற்றும் தலைவர் அறுவடைக்கு பின்னர் தொழில்நுட்பத் துறை நன்றி உரை வழங்கினார்.