அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு காவல் ஆய்வாளர் தொல்காப்பியம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு குறித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் க.பிரேம்குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது இதில் நாகரசம்பட்டி காவல் ஆய்வாளர் தொல்காப்பியம் அவர்கள் இன்று மாணவ மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையேபோதை பொருள் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர் அதைத்தொடர்ந்து மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் சிஐடி மூர்த்தி, மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கார்த்திக், செந்தில், நாகராஜன், சரவணன், சண்முகம், நட்ராஜ், சரவணன், திருப்பதி, சங்கரி, மகேஸ்வரி, செல்வராணி, உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *