டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 2002 குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் வெளியிட்டிருந்தது. 2002 குஜராத் வகுப்பு கலவரத்தை தடுக்க மோடி தவறிவிட்டதாக பிபிசி ஆவணப்படம் குற்றம் சாட்டியிருந்தது. குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடி பங்கு குறித்து பல கேள்விகளை ஆவணப்படம் எழுப்பியிருந்ததால் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக எதிர்ப்பை தொடர்ந்து பிபிசியின் ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.இதனையடுத்து பிபிசி ஊடகத்தின் குஜராத் படுகொலை தொடர்பான ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்தது. சமூக வலைதளங்களிலும் இந்த ஆவணப்படம் நீக்கப்பட்டது. ஆனால் பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகள், இந்த ஆவணப் படத்தை பல மாநிலங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தில் இந்த ஆவணப்படம் முக்கியமானதாக் இருக்கக் கூடும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
ஆவணப்படம் தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீது பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 11.30 மணி முதல் பிபிசி அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. பிபிசியின் வருமானம் தொடர்பான ஆவணங்கள் குறித்து சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *