புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி ஜி.என்.பாளையம் நடராஜன் நகருக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 4.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகர், உதவிப் பொறியாளர் சத்தியநாராயணா, ஊர் முக்கியஸ்தர்கள் மணி, ராஜா (எ) ராமன், புஷ்பராஜ், சீனிவாசன், அப்பு, ராஜி, மணி, கர்ணன், ஐயப்பன், ஆனந்தராஜ், முத்தாலு, பாஸ், பழனி, சக்தி, ஜான் பீட்டர், அலெக்ஸ் மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாஸ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், துணை அமைப்பாளர்கள் கோபி, சரவணன், காசிநாதன், தொகுதி துணைச் செயலாளர் ஜெகன்மோகன், தொகுதி செயற்குழு உறுப்பினர் அக்பர், கிளைக் கழக நிர்வாகிகள் வெங்கடாஜலபதி, ஜனா, ஏழுமலை, மிலிட்டரி முருகன், நடராஜன், சங்கர், வீரக்கண்ணு, கமால் பாஷா, சரபுதீன், தமிழரசன், சூர்யா, கோபி, அசார், ராமஜெயம், கோவிந்தராஜ், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.