நாமக்கல் நவம்பர் 07.
மேகதாது அணை விவகாரத்தில் கூட்டணி ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது திமுக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகளின் சங்கத் தலைவர் வேலுசாமி கோரிக்கை.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
கர்நாடக துணை முதலமைச்சர்.டி.கே.சிவகுமார் டெல்லி சென்று மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான வழக்கு தாமதமாவதை விரும்பவில்லை மேகதாது விவகாரம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பும் இல்லை என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் ஆலோசனைக்கு பிறகு தெரிவித்துள்ளார்
மேகதாது அணை கட்டினால் தமிழக காவிரி டெல்டா பாசனத்தில் ஆண்டுக்கு 20 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் நெல் விளைச்சல் இல்லாமல் பாலைவனமாக மாறிவிடும் மேகதாது வழக்கு சம்பந்தமாக தமிழ்நாட்டின் உரிமையை நீதிமன்றம் மூலம் நிலைநாட்டி காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமையை பெற்று தர வேண்டும் இவ்வாறு தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்