திண்டுக்கல் மாவட்டம் பழனி வ உ சி மத்திய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாக கடைகள் மற்றும் காந்தி தினசரி சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளை வியாபாரிகளுக்கு ஏலம் விடுவதற்காக நகராட்சி சார்பில் வருகின்ற 14ஆம் தேதி பொது ஏல அறிவிப்பு நகராட்சி ஆணையர் தலைமையில் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் நடத்தப்பட உள்ள பொது ஏலத்தில் தமிழக அரசு சட்டத்தின் படி இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்
திருவளவன் மண்டல துணைச் செயலாளர் ஜலால் முகமது செய்தி தொடர்பாளர் பொதினிவளவன் துணைச் செயலாளர் பாவேந்தன் தொகுதி செயலாளர் போர்கொடியேந்தி ஆகியோர் தலைமையில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்..
தொடர்ந்து அரசு விதிகளின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டங்கள் உள்ள நிலையில் இவற்றை முறையாக பயன்படுத்தி பொதுஏலம் நடைபெற வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளன..
தொடர்ந்து இந்நிகழ்வில் நகர துணைச் செயலாளர் தமிழண்ணன் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் கவுன்சிலர் திருமாறன் சங்கிலித்துரை, இடும்பன், லோகநாதன், சபீக்,சங்கிலித்துரை, அபுல் கலாம் ஆசாத், உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்..