ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் கோயம்புத்தூர் மண்டலம் சார்பில், நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜான்சி லட்சுமிபாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
“உண்மையான மகிழ்ச்சி என்பது பிறருக்காக அளிப்பதிலும் சேவை செய்வதிலும் உள்ளது” என்ற அவர்களின் உயர்ந்த வாழ்வியல் கொள்கையை முன்னிறுத்தும் வகையில், இம்முகாம் சமூகப் பணியின் சிறந்த உதாரணமாக அமைந்தது.
இந்நிகழ்வை ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவன மேலாண்மை குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில் 150 க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் — AGM, RI, Dean, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகமாக பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த ரத்ததான முகாம், மனிதாபிமானம் மற்றும் சமூக ஒற்றுமை பொங்கிய ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஜான்சி லட்சுமிபாய் அவர்களின் பிறந்தநாளை சமூக நலத்துடன் இணைத்து கொண்டாடியதற்காக, பங்கேற்ற அனைவரும் பாராட்டப்பட்டனர்.