திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே புதிய மேம்பாலம் மற்றும் அரைவட்ட சுற்றுச்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளுக்காக சுமார் 900 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஒரு தனியார் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணை
க. மாரிமுத்து.