துறையூரில் அதிமுக நகர செயலாளர் அமைதிபாலு தலைமையில் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் கொண்டாட்டம்

மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அன்னதானம் வழங்கினார்

துறையூர் ஜன-18
திருச்சி மாவட்டம் துறையூர் நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் அமைதிபாலு தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் (ஜனவரி-17) விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதில் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்ஜோதி கலந்து கொண்டு சிலோன் ஆபீசில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இதில் முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன்,
எம்ஜிஆர் அணி மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், ஒன்றிய செயலாளர் காமராஜ்,பேரூர் கழக செயலாளர்கள் ராம்மோகன்,ராஜேந்திரன்,நகர அவை தலைவர் ரவிவர்மா,மாவட்ட பிரதிநிதி மருதமுத்து, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கவிதை மணி,அம்மா பேரவை துணை செயலாளர் தீனதயாளன் (நகர்மன்ற உறுப்பினர்), வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன், அய்யம்பாளையம் கிளை செயலாளர் வழக்கறிஞர் ஏஎஸ் மனோகரன், வழக்கறிஞர்கள்
கண்ணதாசன், செந்தில்குமார், குன்னுப்பட்டி மணிவண்ணன்,
இளைஞர் அணி விவேக்,நகை கடை பாஸ்கர்,கிளை செயலாளர்கள் டாஸ்மாக் ராமு, சங்கர், பாஸ்கர், அருணாசலம்,விஜயரங்கன் ,அபி இளங்கோ,முத்துக்குமாரலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *