வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு நேற்று சென்றார். அங்கு குழுமியிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே, பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை இன்று திறந்து வைத்தார். இந்நிலையில், ஜி7 உச்சி மாநாட்டின் இடையே ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ், தென்கொரிய அதிபர் யூன் சிக் இயோல், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *