ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்
தமிழகத்தில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அரக்கோணம் கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, மாணவன் ரிஷிகேசன் குத்துச்சண்டை பிரிவில் (85-90 கிலோ எடைப் பிரிவு) தங்கப்பதக்கம் மற்றும் கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் நல்லசிவம் குத்துச்சண்டை பிரிவில் (70-75 கிலோ எடைப் பிரிவு) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதையடுத்து
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், , அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் (23.10.2026) சந்தித்து, வாழ்த்துப் பெற்றனர். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன், குத்துச்சண்டைப் பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உள்ளனர்.