செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாம்பரம் சட்டமன்ற தொகுதி பெருங்களத்தூர் பகுதியில் பகுதி கழகச் செயலாளர் சீனு பாபு ஏற்பாட்டில் வட்டக் கழக செயலாளர் 55, மற்றும் 56வது வட்ட கழக செயலாளர்கள் அர்ஜூனன், பிரேம்குமார், மகேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கழக செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்தும் அம்மா பெண்கள் முன்னேற்றத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச ராஜேந்திரன் மேடையில் பேசினார்

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட மாவட்ட கழக பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *