தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் தஞ்சையில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.சந்திரா.திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சத்தியபாமா, வழக்கறிஞர் திரு.ஜெகன் ஆகியோர் போஸ்கோ சட்டம் , குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்து பேசினார்கள்.
மேலும் , சிறப்பான மன நல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.மேற்கண்ட கருத்தரங்கில் பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களும் , அரசு சாரா தன்னார்வ அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு விதமான விழிப்புணர்வு பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டது.கருத்தரங்கின் நிறைவு நாளில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பங்கேற்றவர்களிடம் கருத்துக்களைக் கேட்டார்.மேலும் அவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்