சத்தியமூர்த்தி செய்தியாளர்

கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற காரமடை அருள்மிகு அரங்க நாத சுவாமி கோயில் மாசிமகத் திருத்தேர் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேர்திருவிழாவை முன்னிட்டு நேற்று கிராமசாந்தி, திருமுனை நகர சோதனைகள் உள்ளிட்ட வைபங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பட்டாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத, சங்கு சேகண்டி, மேலதாளங்கள் ஒலிக்க கருடவாகனக் கொடி ஏற்றப்பட்டது. இதை அடுத்து அன்ன வாகன உற்சவம், சிம்ம வாகன உற்சவம், அனு மந்த வாகன உற்சவம், கருடசேவை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வரும் 4.3.2023 சனிக்கிழமை ஸ்ரீ பெட்டத்தம்மன் அழைப்பும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி வருகின்ற 6-3 – 23 திங்கள் கிழமை மாலை நடைபெற உள்ளது. திருத்தேர் நிகழச்சியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு விரிவான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது –

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *