எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் யாருடைய தூண்டுதலின் பேரிலோ தளபதி பெயரையும் கட்சியின் பெயரையும் கெடுப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி பரபரப்பு பேட்டி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மகளிர் அணி மாவட்ட இணை அமைப்பாளர் சசிகலா மற்றும் ஜான்சிராணி ஆகியோர் த.வெ.க தலைவர் விஜய் நியமனம் செய்த பொறுப்பாளர்கள் பட்டியலில் இருந்து ஏழு பேரை நீக்கி போலியாக பட்டியல் தயார் செய்துள்ளதாக குற்றம் சாட்டி சனிக்கிழமை பேட்டி அளித்த நிலையில்,
அதற்கு
மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி மறுப்பு தெரிவித்து, யாருடைய தூண்டுதலின் பேரில் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக தெரிவித்தார்.
மேலும் தனலட்சுமி செய்தியாளரிடம் கூறுகையில்,
மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தளபதி அறிவித்ததில் ஏழு பேரை நீக்கி விட்டதாக பேக் நியூஸ் கொடுத்துள்ளனர் ஏழு பேர் அறிவித்தவர்கள் பொறுப்பில் தான் உள்ளனர். அவர்களை எடுப்பதற்கு எனக்கு எந்த வித அதிகாரமும் இல்லை.தளபதிக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது.தளபதி பெயரையும், கட்சியின் பெயரையும் கெடுப்பதற்காக யாருடைய தூண்டுதலின் பேரில் குற்றச்சாட்டு சொல்கிறார்கள்.
யாரையும் நாங்கள் பொறுப்பில் இருந்து எடுக்கவில்லை.
யாரிடமும் பணத்தை பெற்றுக் கொண்டு பொறுப்பு போடவில்லை.பணம் வாங்குவது தளபதிக்கு பிடிக்காது எங்கள் மாவட்ட செயலாளருக்கும் பிடிக்காது.பெண்கள் கட்சிப் பணிக்கு வருவது பெரியதாக உள்ள நிலையில் எப்படி நாங்கள் பணம் வாங்குவோம்.
இது பொய்யான குற்றச்சாட்டு.ஒன்றியத்திலும் நகரில் உள்ள மகளிர் அணியினர் எனக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பர பதாகை வைத்துள்ளனர். என்னுடைய பெயரையும் ,எங்கள் மாவட்ட செயலாளர் பெயரை கெடுப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
ஏழு பேரையும் பொறுப்பில் இருந்து எடுத்ததாக பேட்டி கொடுத்தனர். ஆனால் யாரையும் பொறுப்பில் இருந்து எடுக்கவில்லை அவர்கள் பொறுப்பில் தான் உள்ளனர்.தலைவர் அறிவித்த அனைவரும் பொறுப்பில் தான் உள்ளனர்.பொறுப்பிலிருந்து எடுப்பதற்கோ,பொறுப்பாளர்களை நியமிப்பதற்கோ தளபதிக்கு மட்டும் தான் உரிமை உள்ளது.
எங்களின் பொதுச் செயலாளரிடம் இந்த 11 பேரையும் நியமித்திட நானே நேரில் சென்று கொடுத்துள்ளேன். பின்னர் நான் எவ்வாறு அவர்களை பொறுப்பில் இருந்து எடுப்பேன் யாருடைய தூண்டுதலின் பேரிலோ என் மீதும் எங்கள் மாவட்ட செயலாளர் மீதும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பழிவாங்குவதற்காக செய்கின்றனர்.ஜான்சிராணி என்பவர் எந்தவித ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. சசிகலா சொல்ல சொல்ல ஜான்சி ராணி பேசுகிறார்.கட்சி பெயரை கெடுப்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். எங்கள் தளபதிக்காக எதையும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார்.