அச்சக தொழில் துறை சார்ந்த நவீன தொழில் நுட்பங்கள் காட்சி படுத்தல்

கோவை கொடிசியா அரங்கில் தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் கூட்டமைப்பு சார்பாக பிரிண்ட் கான் 2025 எனும் கண்காட்சி, நடைபெற்றது,கடந்த 7 ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இதில் அச்சு மற்றும் காட்சி ஊடகத் துறைகளுக்கான பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இடம்பெற்றிருந்தன.

இதில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில், கண்காட்சியில் அச்சுத் துறையில் தற்போதைய நவீன ஆஃப்செட் மற்றும் டிஜிட்டல் பிரிண்டிங் இயந்திரங்கள், உயா் செயல்திறன் கொண்ட இன்க்ஜெட் மற்றும் லேசா் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன..

மும்பை,சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே அச்சக தொழில் துறை தொடர்பான கண்காட்சிகள் நடைபெற்று வந்ததாகவும்,தற்போது கோவையில் கண்காட்சி நடந்துள்ளதாகவும்,, தொழில் வல்லுநர்களுக்கு சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், வணிக வாய்ப்புகளை உருவாக்கவும்,உதவுவதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…

இதனை தொடர்ந்து அச்சக தொழில் துறை சார்ந்த கருத்தரங்கம் நடைபெற்றது..

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாஸ்டர்ஸ் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் செந்தில் குமார், செயலாளர் துரை குமணன்,ஆல் இந்தியா மாஸ்டர்ஸ் பிரிண்டர்ஸ் ஃபெடரேஷன் முன்னாள் தலைவர் சந்தர்,கோயமுத்தூர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜானகிராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *