அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிகான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதில் வைப்புத்தொகை வைத்திருந்த சர்வதேச நிறுவனங்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. சில ஆசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பதாக கூறி உள்ளன. இந்திய நிறுவனங்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. சிலிகான் வேலி வங்கியானது ஸ்டார்ட்அப் மற்றும் மூலதன நிறுவனங்களிடம் டெபாசிட் பெறுவது மற்றும் நிதியுதவி அளிக்கும் பணிகளை செய்து வருகிறது. தற்போது அதன் பங்குகள் அதல பாதாளத்திற்கு சரிந்து, வங்கி திவால் ஆனதால், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், வங்கி நெருக்கடி தற்போது கட்டுக்குள் இருப்பதாக நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை அளித்துள்ளார். சிலிகான் வேலி வங்கியில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும், வரிசெலுத்துவோருக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்றும், வங்கிகள் வைப்புத்தொகை காப்பீட்டிற்கு செலுத்தும் கட்டணத்தில் இருந்து பணம் வரும் என்றும் பைடன் கூறியிருக்கிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *