திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டத்தில் வைக்கோல் ஏற்றி வந்த வாகனம், மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி வாகனம் முற்றிலும் எரிந்து நாசமடைந்தது.
சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அறுவடை நடைபெற்ற வயல்களில் இருந்து வைக்கோல்கள் சேகரிக்கப்பட்டு கட்டுகளாக கட்டி வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் பெல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் சிதம்பரம் இவர் மாடுகளுக்கு தீவனமாக தாராபுரத்தில் இருந்து வைக்கோல் வாங்கி ஈச்சர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு குண்டடம் வழியாக வடுகநாதர் சாமி திருக்கோவில் அருகே சென்று கொண்டிருந்தது அப்போது ஈச்சர் வாகனத்தில் இருந்த வைக்கோல் உயரே சென்ற மின்கம்பி மீது உரசியது.

இதில் வைக்கோல் தீப்பிடித்து மளமளவென பரவியது. இதைக் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மணி, தலைமையில் தீயணைப்பு படையினர்னர் வாகனங்களுடன் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர் இந்த விபத்தில் தீ மளமளவென பரவி ஈச்சர் வாகனம் மற்றும் அதில் இருந்த வைக்கோல் முழுவதும் தீயில் எரிந்து நாசமாயின.

இதன் சேத மதிப்பு ரூ.28, லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக ஈச்சர் வாகன ஓட்டுநர் மகேஷ் உயிர் தப்பினார்.

இந்த தீ விபத்து குறித்து குண்டடம் காவலர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *