“நலதிட்ட உதவி வழங்கும் விழா” கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக வெண்ணிலா கபடிக்குழு ஹரி வைரவன் காலமானதையொட்டி அவரது மனைவி கவிதா அவர்களுக்கு நாலு சக்கர வண்டியும், பழங்களும், ரொக்க பணமும் அறக்கட்டளை நிறுவனர் சத்யநாராயணன் நல்லாசியுடன் இயக்குனர் சத்தியசீலன் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் முன்னிலையிலும் டாக்டர் விஜய் கிருஷ்ணன், டாக்டர் சகாயாஜென்சி அவர்கள் இணைந்து வழங்கினார்கள். உடன் வசனகர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான பிரேம்ஜி, நடிகர் வாகை பிரபு,நடிகை ராஜி (எ) ஹரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.