பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்களால் பீதியில் பொதுமக்கள்..

வயல், வறப்புகள் மற்றும் வாய்க்கால்களில் இறங்கி, சோதனையில் ஈடுபடும் வனத்துறை அதிகாரிகள்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் சில தினங்களாக சிறுத்தைகள் நடமாடுவதாக தகவல்கள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களும் பீதி அடைந்த நிலையில் உள்ளனர். இந்நிலையில் பாபநாசம் தாலுக்கா இடையிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (44) என்பவர் அதே பகுதியில் தனது சொந்த வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றிருந்தார்.

அப்போது அவர் இரண்டு சிறுத்தை நடமாடுவதைக் கண்டதாக அவரது நண்பர் செந்தில்குமாரிடம் தெரிவிக்க, தகவலின் பேரில் பாபநாசம் போலீசார் மற்றும் தஞ்சை வனசரக அலுவலர் ரஞ்சித் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, எங்காவது சிறுத்தைகளின் கால் தடங்கல் பதிந்துள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்விற்குப் பின்பு வனசரக அலுவலர் ரஞ்சித் கூறும்போது,

சிறுத்தைகள் நடமாட்டம் ஏற்பட்டதற்கான எந்தவித தடயங்களும் தென்படவில்லை எனவும்,
பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி தொடர்ந்து இரவு நேரங்களிலும் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணிக்கப்படும் எனவும்,
பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும்,தொடர்ந்து வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இந்த ஆய்வின் போது, பாபநாசம் தனிப்பிரிவு போலீசார் மாரிமுத்து, வானவர் ரவி,இளஞ்செழியன் மற்றும் வனக்காப்பாளர் ரவி, தோட்ட காவலர் ஜெயபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *