தாராபுரம்:பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து வரும்போது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் சவுக்கு சங்கர் வந்த போலீஸ் வாகனம் விபத்து!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரை கோவை அழைத்துச் சென்றனர்.

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாகக் கிடைத்த தகவலை யொட்டி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

அங்கிருந்து அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் புறவழிச் சாலையின் வழியே டெம்போ ட்ராவலர் போலீஸ் வாகனத்தில் அவர் அழைத்து வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த மாருதி ஸ்விப்ட் கார் மோதி விபத்துக்குள்ளானது. பிரபல youtube சவுக்கு சங்கர் உட்பட இரண்டு போலீசார் காயமடைந்தனர்.

அவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு கோவை அரசு மருத்துவமனைக்கு வேறொரு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

தாராபுரம் செய்தியாளர் தாலுக்கா பிரபு
9715328420

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *