100 நாள் பணியாற்றும் பெண்களுடன் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காந்தி பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் தலைமையில், மகாத்மா காந்தி நினைவு நாளில்
திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
. மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட 100 நாள் பணியாளர்கள் கலந்துகொண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும், மீண்டும் காந்தி பெயரை வைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
கூட்டத்தில் மாநில பொது குழு உறுப்பினர் ஐயப்பன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் நிக்கோலஸ், மணிகண்டன், புஷ்பராஜ், ஏழுமலை, இளைஞரணி நிர்வாகி அனீஸ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விவேகானந்தன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சுமிதா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முருகன் சாந்தகுமார், மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.