செய்தியாளர் சீனிவாசன்.
திருவள்ளூர் அருகே விவசாயிகளின் நிலங்களில் உள்ள மின் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள மின் வயர்களை தொடர்ச்சியாக திருடிச் செல்லும் மர்மநபர்களை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும் என விவசாயிகள் மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட
புலிகுண்டம், ஊராட்சியில் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் சம்பங்கி, பிச்சிப்பூ, மல்லிகைப்பூ, உள்ளிட்ட பயிர் வகைகளை விவசாயம் செய்து வருகின்றன,
இந்நிலையில் அத்தகைய விவசாய நிலத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள்
பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலங்களில் நடுவாக ஆங்காங்கே நீர்மூழ்கி மோட்டர்கள் மூலமாக தண்ணீர் பாய்ச்சு விவசாயம் செய்து வரும் நிலையில்,
மர்ம நபர்கள் திருட்டுத்தனமாக மின்சார கம்பங்களில் இருந்து விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள மோட்டோர்களுக்கு வரும் வயர்களை துண்டித்து திருடி சென்றுபோய் விடுவதாகவும் அதனால் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்புக்குள்ளாகவதாகும்,இதுபோன்று ஒவ்வொரு முறையும் திருடர்கள் வயர்களை அறுத்துக் கொண்டு போகும் போது சுமார் 20000 லிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்,
எனவே இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலம், காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டபோது வழக்கை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு திருடர்கள் நடமாடுவதை கண்காணித்து பாதுகாப்பை ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்,எனவே விவசாயத்தையே நம்பி பிழைப்பு நடத்தி வரும் எங்கள் மீது அரசாங்கம் கருணை உள்ளத்தோடு தயவு காட்ட வேண்டும் எனவும் வயர்களை திருடும் குற்றவாளிகளை விரைவில் காவல்துறையினர் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.