தூத்துக்குடி நவ 14
தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் ஐப்பசி தேரோட்டம் நேற்று (13.11.2025)நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாள் பாகம்பிரியாள் எழுந்தருளிய திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்களுக்கு பாகம்பிரியாள் மகளிர் அறக்கட்டளை ஏற்பாட்டில் தூத்துக்குடி சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாகம்பெரியால் மகளிர் அறக்கட்டளை தலைவர் சங்கரி ரமேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவஜோதி நரேந்திரன், ஜெயந்தி திருவேங்கடம், முத்துலட்சுமி ராஜபாண்டியன், மகாதேவி திருச்சிற்றம்பலம், வள்ளி இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கி துவங்கி வைத்தார். அப்போது, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா. சுதாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டைகர் சிவா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், பகுதி செயலாளர் ஜெய் கணேஷ், வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சரவண பெருமாள், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர்கள் சண்முகபுரம் மாடசாமி, சங்கரநாராயணன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் அன்ன பாக்கியம், முத்துலட்சுமி, பாசறை நிர்வாகிகள் சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா, இசக்கிமுத்து, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் செல்வ மாரியப்பன், ஐடி விங் சொக்கலிங்கம் பாலஜெயம் சாம்ராஜ் சகாயராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.