திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேல் வரவேற்றார்,
சிறப்பு விருந்தினராக வலங்கைமான் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச் செம்மல் இராம.வேல்முருகன், முதலாண்டு துறைத் தலைவர் முனைவர் முருகன், உடற்கல்வி இயக்குனர் முனைவர் அகஸ்டின் ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா போன்றவை பரிசளிக்கப்பட்டன, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் எழத்தாளரும், பள்ளியின் அறிவியல் ஆசிரியருமான ஆதலையூர் சூரியகுமார் அறிமுகப்படுத்தி பேசினார்,
விழா முடிவில் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.