மதுரை மாவட்டம், ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள மோயிசன் இறைச்சி கடை கடையில் கெட்டுப்போன இறைச்சி விற்கப்படுவதாக தகவல் பெறப்பட்டதனை தொடர்ந்து நியமன அலுவலர் சிவராமபாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகர்,ராஜா, சந்திரமோகன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழு மேற்கண்ட கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேற்கண்ட ஆய்வில் கெட்டுப்போன கோழியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி எடையினை அதிகப்படுத்துவதற்காக ஊசி மூலமாக தண்ணீர் செலுத்துவது கண்டறியப்பட்டது. மேலும் கெட்டுப்போன இறைச்சிகள் சுமார் 1200 கிலோ மேற்கண்ட கடையில் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்து மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மூலம் அழிக்கப்பட்டது. மேலும் இக்கடையில் கெட்டுப்போன மற்றும் சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை செய்ததற்காக அபராதமாக ரூ.13,000/- விதிக்கப்பட்டது.


உணவு மேற்கண்ட கடையில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. மேற்கண்ட உணவு மாதிரிகளின் ஆய்வறிக்கை பெறப்பட்டதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்களின் நலன் கருதி மோயிசன் இறைச்சி கடையின் உணவு வணிகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதனை தெரிவித்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *