முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் போன்ற உலர்ந்த பொருட்களை கொண்டும் உயர் ரக மதுபானங்களை கொண்டு பிரமண்டமான 100 கிலோ கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி குன்னூர் ல் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைப்பெற்றது…
கிறிஸ்துமஸ் என்றாலே அனைவரிப் நினைவுக்கு வருவது பலவகையான கேக் தான்…. பிளாக் பாரஸ்ட், வென்னிலா, சாக்லேட், பிளம், தெராமிஸி என பல வகையான கேக்குகள் அன்றாட நாம் அறிவோம்.
வேகமாக மாறி வரும் இன்றைய உலகில் நேரமின்மை காரணமாக கேக் தயாரிப்பதை மறந்து கடைகளில் வாங்கி சென்றாலும் இந்த சுவையான கிறிஸ்மஸ் கேக் பின்னணியில் பல சுவையான தகவல்களும் உள்ளன.
17ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கிறிஸ்மஸ் கேக் தயாரிப்பதற்கான பணிகள் ஒரிரு மாதங்களுக்கு முன்பாகவே துவங்கி விடுவதாகவும், கேக் கலவை செய்வது அறுவடை காலத்தை குறிக்கின்ற வகையிலும், புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் பெரிய சம்பிரதாயமாக கருதப்பட்டு வந்ததாம்.
இத்தகைய வளமான சம்பிரதாயத்தை இன்றைய கால கட்டத்தில் எடுத்துரைக்கும் வகையில் குன்னூர் ல் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்த கேக் கலவை தாயாரிக்கும் பணி இன்று நடைப்பெற்றது.
இந்த கலவையின் போது முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம், செர்ரி, பேரிச்சைபழம் மற்றும் உயர் ரக மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கலக்கப்பட்டன. கிறிஸ்மஸ் பண்டிக்கைக்கு ஒரிரு தினங்கள் வரை இந்த கலவை ஊறி நறுமணமும், சுவையும் சேர அவ்வப்போது கிளரப்படுகிறது.
கேட்பதற்கே கேக் கலவை சுவையாக இருக்கும் போது சுவைத்தால் எப்படி இருக்குமோ என்பது கற்ப்பனைக்கு எட்டாதது அல்ல. இந்த கேக் கலவை தயாரிக்கும் பணியில் ஹோட்டலில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.