வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
வ.உ.சி குருபூஜையை முன்னிட்டு ஆத்ம ஜோதி ஊர்வலத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.
நவம்பர் 18-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் நடைபெற உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் 89-வது ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, 15-ம் தேதி திண்டுக்கல்லில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருவுருவ சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து ஆத்ம ஜோதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். உடன் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் தலைவர் ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.கே.ரகுராம், பொருளாளர் ரவி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.