கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளமான வி.செந்தில் பாலாஜி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்
பின்னர் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் திமுக சார்பில் 14, 17 ,19 ஆகிய வயதுக்குட்பட்ட மூன்று பிரிவுகளாக சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை துவக்கி வைத்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் குறிப்பாக கரூர் தொகுதியை சீர்குலைக்க வேண்டும் என்று அதிமுக வை முன்னிறுத்தி பாஜக பின்னால் இருந்து இயக்குகிறது குறிப்பாக கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணியம் கோவிலுக்கு சொந்தமான நிலப்பிரச்சனையில் அங்குள்ள பொது மக்களுக்கு சட்டரீதியாக திமுக துணை நிற்கிறது
இந்த பிரச்சனைக்கு மூல காரணமே கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சட்ட அணுகுமுறையை காரணம் இதனை அப்போது அமைச்சரவையில் இடம் பெற்ற எம்.ஆர். விஜயபாஸ்கர் சட்டமன்றத் தேர்தலுக்காக தற்போது 420 வேலை பார்த்து வருகிறார் என குற்றம் சாட்டிய செந்தில் பாலாஜி பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்றென்றும் திமுக சார்பில் உதவியாக இருப்போம் என்றார்..
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அரவக்குச்சி இளங்கோ, கிருஷ்ணாயபுரம் சிவகாமசுந்தரி, குளித்தலை மாணிக்கம் மேயர் கவிதா, கரூர் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்,