தமிழ்நாட்டு சட்டசபையில் இன்றைய வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரையில் எந்த தொழிலும் இல்லாத நிலையில் மெட்ரோ வந்து என்ன பயன் எனவும், தொழில்பேட்டை தொடங்குங்கள் ஆஹா ஓஹோ எனப் பாராட்டப்படும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே அண்ணனை பார்த்து ஆஹா ஓஹோ என்றதாகவும், மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள் ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புலிவாலை பிடித்து படம் வெளியிட்டுள்ளார். அதிலும் ரொம்ப விவரமாக அண்ணன் புலியின் வாயை பிடிக்காமல் வாலை பிடித்துள்ளதில் தெரிவதாகவும் கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

மேலும், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக கூறிய அவர், மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்க முதலமைச்சர் அறிவித்துள்ளதோடு, சிப்காட் தொழிற்சாலை வருவதற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மக்களிடத்தில் சமச்சீரான தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என்றும், அதிகமான முதலீடுகள் தென் மாவட்டங்களை நோக்கி வர தொடங்கியுள்ளதால், மதுரையில் நிச்சயமாக புதிய தொழில் பேட்டைகள் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *