கோயம்புத்தூர் மாநகராட்சி 2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் மாமன்ற சிறப்பு கூட்டம், கோவை மாநகரட்சி விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு பட்ஜெட் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர் இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், கடந்த பட்ஜெட்டிற்கும் தற்போதைய பட்ஜெட்டிற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்று குற்றம் சாட்டினார்

மேலும் கோவை மாநகரின் சாலை வசதி, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்களில் தனி கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு வெற்று காகித பட்ஜெட் என்று விமர்சித்து பேசினார். கடந்த ஆண்டு கொடுத்த பட்ஜெட் புத்தகம் மட்டுமே தற்போது மாறி இருக்கிறது என்றும், மக்கள் நலனில் துளிகூட அக்கறை இல்லாத மாமன்ற பட்ஜெட் கூட்டமாகவே இதை பார்க்கிறோம் என்றும் அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *