மதுரை உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த சண்முகவேல் கடந்த 3 தினங்களாக ஓய்வில்லாமல் பட்டியல் தீர்வு போன்ற அலுவலக பணிகளை மேற் கொண்டதால் நேற்று அலுவலகத்தில் அவரது இருக்கையில் அமர்ந்தவாறு மாரடைப்பால் காலமானார்.

கருவூலத்துறையின் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ். சர்வர் சரிவர இயங்காததால் ஏற்பட்ட மன உளைச்சல் காலிப் பணியிடங்களால் கூடுதல் பணிப்பளு, மேலும் – இவ்வாண்டு கடைசி 3 நாட்களுக்குள் திட்டத்திற்காக லட்சக்கணக்கில் நிதியை ஒதுக்கி பணியை செய்து முடிக்க நிர்ப்பந்தித்து நிதிநிலையை முடிக்க வேண்டும் என்ற மன அழுத்தத்தால் மரணம் நிகழ்ந்ததால் முழு பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கும் வேளாண்மைத்துறைக்குமே உண்டு என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் நிவாரணமாக ரூ 1 கோடியும் நிபந்தனையற்ற முறையில் கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு பணிநியமனமும் உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர்நீதிராஜா, , மாவட்ட இணைச்செயலாளர்ராம்தாஸ், வட்டக்கிளை செயலாளர்கள் பழனிவேல், ஞானப்பிரகாசம், மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் துரைக்கண்ணன், துணைத்தலைவர் துரைராஜ், தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *