புதுமைப்பெண் திட்டம் குறித்து, கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் புதுமைப் பெண் திட்டத்தினை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட் டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 1981 மாணவியருக்கு முதற்கட்டமாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரு கிறது. தற்போது, முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த 2-ம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் 1187 மாணவி யர்கள் என மொத்தம் 3168 கல்லூரி மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏழை, எளிய வர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில போதிய வசதி இல்லாத காரணத்தினாலும், சில பெற்றோர்கள் பணியின் காரணமாக வெளியூரில் வேலைபார்ப்பதினால் தங்களது குழந்தைகளை உறவினர்கள் வளர்ப் பதினாலும், பள்ளி பரு வத்திலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பதினாலும் பெண் குழந்தைகளால் உயர்கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை உணர்ந்த முதல்-அமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தினால் பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தை களின் இடை கல்விநிற்றல் விகிதத்தைக் குறைப்பது மட்டுமல்லாது பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கவும், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்ப டுத்தி அனைத்துத் துறை களிலும் மகளிரை முன் உதாரணமாக பங்கேற்கச் செய்யவும், உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண் களுக்கான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்திடவும் இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் வழிவகை செய்கிறது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிக ரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவி களுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற் கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். மேலும், மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். இத்திட்டத்தில் பயன் பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப் பேசி எண்.14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம். இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வியில் 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப் பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப் பங்களை ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற ஆவண நகல்களைக் கொண்டு மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும் இணையதளம் முகவரியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப் பட்டு சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டத்தி னால் அனைத்து மாணவி யர்களும் உயர்கல்வி பயின்று, வேலைவாய்ப்பு பெற்று, பொருளாதாரத்தில் சுதந்திரமாக, சொந்தகாலில் நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *