அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி மந்தை திடலில் திராவிடர் கழகம் சார்பில் உலக மகளிர் நாள் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா பிரச்சாரப் பொதுக்கூட்டம் திராவிடர் இயக்கமும் மகளிர் புரட்சியும் எனும் தலைப்பில் நடைபெற்றது

இந்தக் கூட்டத்திற்கு புறநகர் மாவட்டம் மகளிர் அணி தலைவர் பாக்கியலட்சுமி, தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட தலைவர் எரிமலை, முன்னிலை வகித்தார். புறநகர் மாவட்ட தலைவர் பால்ராஜ், வரவேற்புரை ஆற்றினார் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில அமைப்பாளர் திராவிடர் கழகம் மகளிரணி அணி மகளிர் பாசறை மதிவதனி,கலந்து கொண்டு பேசியது திராவிடர் கழகம் மகளிர் புரட்சியும் பெண்களுக்கு சமத்துவத்தை பேணிக் காத்த தந்தை பெரியார் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் ஆகியோர் பெண்களுக்கு சமூக நீதி சமத்துவத்தை பேணிக்காத்த தலைவர்கள் ஆனால் கடந்த காலங்களில் பெண்களை வீட்டு வேலை செய்ய அடிமைப்படுத்தி சித்திரவதை செய்தவர்கள் மத்தியில் சுயமரியாதை ஒழுக்கம் பெண்களுக்கு சுதந்திரத்தை கொடுத்து இன்று பணி செய்யும் இடத்திலும் அரசு அலுவலகங்கள் மற்றும் ஆட்சியிலும் 50 சதவீதம் பெண்களுக்கு என்று உரிமையை விட்டுக் கொடுக்காமல் எங்களின் தலைவர் திரு கி வீரமணி ஐயா அவர்கள் தனது வயதையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார் தமிழகத்தில் எங்களின் கூட்டணி ஆட்சி நடத்தும் சமூக நீதிக் காவலர் மாண்புமிகு ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறும் அரசு மகளிருக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார் இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினர் மன்னர்மன்னன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் நேரு, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அலங்கை வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயல், காந்தி, விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சோழவந்தான் தொகுதி செயலாளர் சிந்தனைவளவன், மாவட்ட அமைப்பாளர் அதிவீரபாண்டியன், ஆதி தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் தமிழ்குமரன், தமிழ் புலிகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சிங்கப்பாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் பாலா, கலந்துகொண்டு நன்றி கூறினார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *