காரைக்கால் தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50- இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளை நாஜிம், M LA தொடங்கி வைத்தார்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுநகர் லயன்கரை பகுதியில் சமுதாய கூடம் அருகில் அங்கன்வாடி கட்டுவதற்கு ரூபாய் 9-இலட்சம், குயவன் சாவடியில் உள்ள நிர்மலா கார்டன் பகுதிக்கு புதிய சாலை அமைக்க ரூபாய் 19-இலட்சம் 21-ஆயிரம், அம்பாள் சத்திரம் பெரியாச்சி கோவிலுக்கு சாலை அமைக்க ரூபாய் 12-இலட்சம் 54-ஆயிரம், மற்றும் காரைக்கால் கடற்கரை காந்தி சாலையில் அமைந்துள்ள படகு சவாரி (BOAT HOUSE) காத்திருப்பு அறை கட்டுவதற்கு ரூபாய் 8-இலட்சம் 64-ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் பணிகளைநாஜிம், ML A தொடங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்வில் காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர் திரு. லோகநாதன், இளநிலை பொறியாளர் ஜோதிபாஸ், T.பிரபு@பிரித்திவிராஜ், அரசு வழக்கறிஞர் AVJ. செல்வமுத்துக்குமரன், நுகுமான், ராஜ்மோகன் மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *