உத்தமபாளையத்தில் அல்-பைத்துல் முக்கதுஸ் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் தேனி மாவட்ட உத்தமபாளையத்தில் அல் பைத்துல் முக்கதுஸ் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது
இந்த முகாமில் பொதுமக்களின் ஆரோக்கிய பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட உள்ளூர் மக்கள் பலரின் பங்களிப்பால் சிறப்புமிகு நிகழ்வாக அமைந்தது.
இந்த முகாமில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கூடல் சி. செல்வேந்திரன் தேனி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம். தங்கப்பாண்டியன் மற்றும் நமது மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த முகாமில் இரத்ததானம் செய்த டோனர்களை நேரில் சந்தித்து பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தின் முதன்மை மருத்துவ அலுவலரும் இரத்த வங்கி பொறுப்பாளருமான டாக்டர் டி.பாரதி தலைமையில் செவிலியர்கள், இரத்தத்தை சேகரித்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த முகாமில் ஏராளமானோர் இரத்த தானம் செய்தனர்