திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமாக விளங்குகிறது 316 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு கடந்த பிப்ரவரி 18-ந் தேதி அகற்றினர்.

பின்பு திருவாரூர் மாவட்ட வனத்துறையினர் தொழிலாளர்களைக் கொண்டு ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தினர். பல இடங்களில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி கரையில் குவித்து வைத்து பின்னர் தீ வைத்து எரித்து விடுவர். இது சுற்றுச்சூழலுக்கு தீங்கானதாக இருந்தது.

காற்றும் மாசுப்பட்டு வந்தது இதனை தவிர்க்க திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலர் முனைவர் கே.அறிவொளி கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு ஆகியோர் ஆகாயத்தாமரை செடிகளை இயற்கை உரமாக மாற்றி அதனை மரக்கன்றுகளை வளர்க்க பயன்படுத்தலாம் என்ற புதிய முயற்சியை மேற்கொண்டனர்.

இயற்கை உரம் தயாரிப்பதற்காக வடுவூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் அரை ஆழம் 50 அடி நீளம், 30 அடி அகலத்தில் குழி வெட்டப்பட்டு அதில் ஆகாயத்தாமரை செடிகளை நிரப்பி இயற்கை உரமாக மாற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இது குறித்து கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு கூறுகையில்தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்து வருகிறது. இது நாளடைவில் நீர்நிலைகளை தூர்ந்து போக செய்து விடுகிறது. இதனை தவிர்கவே வடுவூர் ஏரியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற திருவாரூர் மாவட்ட வனத்துறையுடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டோம்.

இதில் நூற்றுக்கணக்கான தன்னார்வ அமைப்புகள், ஆயிரக்கணக்கான நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்பின்பு வனத்துறை ஒத்துழைப்புடன் ஆகாயத்தாமரை செடிகளை இயற்கை உரமாக மாற்றும் பணியை செய்து வருகிறோம்டபிள்யு டி சி எனப்படும் வேஸ்ட் டி கம்போஸ் ஜெல்நாட்டு சர்க்கரை இரண்டையும் நீருடன் சேர்த்து திரவம் தயார் செய்து ஆகாயத்தாமரை செடிகளில் தெளித்து வருகிறோம் இதில் தேங்காய் நார் கழிவு சேர்க்கப்பட்டு படுதா கொண்டு மூடி வைத்து குறிப்பிட்ட நாள் இடைவெளியில் மீண்டும் கிளறி விட்டு கரைசல் தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது 45 நாள் முடிவில் இயற்கை உரம் கிடைக்கும் இதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருக்கின்றோம்

இது குறித்து வனத்துறை அலுவலர் முனைவர் க.அறிவொளி கூறுகையில்வடுவூர் ஏரியில் அகற்றிய ஆகாயத்தாமரை செடிகளை இயற்கை உரமாக்கும் பணியை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம். இந்த இயற்கை உரம் விற்பனை நோக்கில் உற்பத்தி செய்யப்படவில்லைஒரு சோதனை முயற்சியாக இதனை செய்து வருகிறோம் இந்த இயற்கை உரத்தினை மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய பயன்படுத்த இருக்கிறோம் என தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *