நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ் அமைப்பானது நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஜெர்மனியில் சர்வதேச அளவிலான சிறப்பு ஒலிம்பிக்ஸ் கோடைகால விளையாட்டுப் போட்டிகளானது வரும் ஜூன் மாதம் 17 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியானது உலக அளவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாகும். இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 170 நாடுகளிலிருந்து சுமார் 7,000 அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை கள். 3,000 பயிற்சியாளர்கள், 20,000 தன்னார் வலர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் என 26 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டி களில் கலந்து கொள்வதற்கு இந்தியாவிலிருந்து 59 பயிற்சியாளர்களுடன் 202 அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 15 பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இதில் தமிழகத்திலிருந்து 3 பயிற்சியாளர்களுடன் 16 அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் 2 யூனிபைடு சக விளையாட்டு வீரர்களும் ஆக மொத்தம் 18 பேர்கள் இவ்விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

குறிப்பாக மதுரை மாவட்டத்திலிருந்து மொத்தம் 6 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அதிலும் மதுரை, சிக்கந்தர்சாவடியில் அமைந்துள்ள பெத்சான் சிறப்பு பள்ளியிலிருந்து 5 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அந்த பள்ளியிலிருந்து இரண்டாவது முறையாக சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஜெர்மனியில் நடைபெறவுள்ள சர்வதேச சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் மதுரை பெத்சான் சிறப்புப்பள்ளி விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் பற்றிய விபரங்கள் : விளையாட்டு வீரர் மற்றும் கலந்து கொள்ளும் விளையாட்டு

01) பி. சூர்யா (வயது 19)
புட்சல் (கால்பந்து)

02) ஏ. முகேஷ்சுந்தர், ( வயது 26)
புட்சல் (கால்பந்து)

03) பி. நாகவேல்.
(வயது 37)
வாலிபால்

04) வி. மாதேஷ்பாபு, (வயது 21)
வாலிபால்

05) சி. கமலேஷ்.
(வயது 22)
புட்சல் (கால்பந்து)

இந்த பள்ளியில் சிறப்பு கல்வி பயின்றுவந்த அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறன் கொண்டவர்களில் இதுவரையிலும் 13 பேர்கள் மதுரையில் உள்ள பல்வேறு தனியார் கம்பெனிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் மதிப்புமிக்க பணியில் நல்ல ஊதியத்துடன் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும் எமது மாணவரில் ஒருவர் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறையிலும், மற்றொருவர் மத்திய அரசின் விமான பயிற்சி மையத்திலும் பணிநியமனம் பெற்றுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக மற்றொரு மாணவர் மனோஜ்குமார். இந்திய இராணுவ மருத்துவமனையில் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளார்.

இருபெரும் விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் பெத்சான் சிறப்பு பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் வரவேற்று பேசினார். பின்பு சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களை அறிமுகம் செய்து சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இதுவரை பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பெற்ற வெற்றிகளைப் பற்றி பள்ளியின் முதல்வர் ரவிக்குமார் பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத் பிராந்திய விளையாட்டு இயக்குநர் நாகராஜன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, செயல் இயக்குநர் ரிஸ்வந்த் , தொழிலதிபர்கள் முரளிகிருஷ்ணன், ஆனந்தகுமார் மற்றும் புரவலர் ராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் பள்ளி மாணவர்கள். பெற்றோர்கள் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *