திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணாமலை நகர் டிச்சி கிரௌண்ட் பகுதியில் எண்ணூர் காவல் உதவி ஆணையர் வெங்கட் குமார் உத்தரவின் பேரில் திருவொற்றியூர் சாத்தாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது அலி ஜின்னா மற்றும் மணலி உதவி ஆணையாளர் வேலயா பாண்டியன் மற்றும் பாலாஜி ஆகியோரின் தலை மேலான போலீசார் மற்றும் எண்ணூர் உதவி ஆணையாளர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜேஷ் குமார், ரஞ்சித் குமார், கேசவன் மற்றும் அன்பு ஆகிய தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு இளைஞர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதற்காக அண்ணாமலை நகர் கிரவுண்ட் அருகே உள்ள மறைவிடத்தில் நின்றிருந்த இதுவரை மடக்கி பிடித்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு லட்சம் மதிப்பிலான 514 வலி நிவாரணி போதை மாத்திரைகள் மற்றும் 25 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டத்தில் நீண்ட நாட்களாக அந்தப் பகுதியில் அப்போதை பொருட்களை விற்பனை செய்து வந்த கே கே நகரை சேர்ந்த சிவபாலன் 24 மற்றும் எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சரத் என்கின்ற திருட்டு கேட்டு சரத் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு ஆஜர் படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்