வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் திண்டுக்கல் தனியார் மீட்டிங் ஹாலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது.


அப்போது அவர் கூறுகையில்:-
கிராம நிர்வாக அலுவலர் கொலை அரங்கேறி உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காரணம் மது தான், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு காரணம் கஞ்சா தான். கொரோனாவுக்கு பிறகு தான் கஞ்சா தற்பொழுது உச்சகட்டமாக விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் எல்லைகளிலிருந்து கஞ்சா வரப் பெறுகிறது. கஞ்சா பவுடர், கஞ்சா எண்ணெய், கஞ்சா பேஸ்ட், கஞ்சா சாக்லேட் கஞ்சா ஸ்டாம்பு என கஞ்சாவில் பலவித வடிவங்களில் வெளிவருகின்றன.
கஞ்சா மட்டும் அல்ல அபின், ஹாக்கின், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பஞ்சாப் எல்லை, பர்மா வழியாக வந்து கொண்டிருக்கிறது.
தமிழக முதலமைச்சர் போதைப் பொருட்களை ஒழிக்க சிறப்பு கவனம் எடுக்க வேண்டும். மாதந்தோறும் இது சம்பந்தமான கூட்டங்கள் நடத்த வேண்டும். போதை பொருள் தடுப்புச் சட்டத்தில் கடைசியாக உள்ளவர்களை மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள் முக்கியமானவர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். உடன் மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *