தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன் பட்டி மழை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வன் எம்பி தலைமையில் கோலகாலமாக நடைபெற்றது

இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 30 முதல் 10 மணிக்குள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் பல்வேறு யாக பூஜைகள் செய்து பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கூத்தனாட்சி அம்மன் கோவில் கோபுர கலசத்துக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலகாலமாக நடைபெற்று முடிந்தது.

இந்த விழாவில் கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் காமய கவுண்டன்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி பி வேல்முருகன் துணைத் தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் மூத்த வழக்கறிஞர் துரை நெப்போலியன் தேனி பாராளுமன்ற தொகுதி எம் பி யின் மகன் வழக்கறிஞர் நிஷாந்த் உள்பட காமயகவுண்டன் பட்டி நாராயண தேவன் பட்டி மற்றும்
இதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் கம்பம் நகர பகுதி மக்கள் உள்ளிட்ட சுமார் 5000 பக்தர்கள் பங்கேற்று கூத்தனாட்சி அம்மன் அருள் பெற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *